ஆண்,பெண் பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.ஆண்களுக்கு ஏற்படும் நீர்த்த விந்து,குறைவான விந்து வெளியேற்றம்,பாலியல் ஈர்ப்பின்மை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை நீங்க பூசணி விதை உதவுகிறது.பூசணி விதையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
மேலும் மெக்னீசியம்,காப்பர்,புரோடீன்,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் ஆண்மையை அதிகரிக்க முடியும்.சிறிதளவு பூசணி விதை உட்கொண்டாலும் உடலுக்கு அதிகளவு ஆற்றல் கிடைக்கும்.இதன் காரணமாகவே பூசணி விதையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
நொறுக்குத் தீனி உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ்,ட்ரை புரூட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
காம உணர்வு அதிகரிக்க பூசணி விதையை சாப்பிடலாம்.உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூசணி விதை உதவுகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பூசணி விதை சாப்பிடலாம்.
பூசணிக்காய் விதையில் இருக்கின்ற மெக்னீசிய சத்துக்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.
ஆண் மற்றும் பெண்ணில் பாலியல் ஆரோக்கியம் மேம்பட பூசணி விதையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
20 கிராம் பூசணி விதைகளை கடாயில் போட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.பூசணி விதை மொரு மொரு பதத்தில் இருக்க வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் நாட்டு மாட்டு பால் சேர்த்து கொதிக்க விடவும்.
குறைவான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.அதன் பின்னர் வறுத்த பூசணி விதையை பாலில் சேர்த்து குடிக்க வேண்டும்.தினமும் இருவேளை இந்த பால் குடித்து வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.