உங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? ஏழே நாட்களில் சரியாக இந்த ஒரு இலை போதும்! 

0
235
#image_title

உங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? ஏழே நாட்களில் சரியாக இந்த ஒரு இலை போதும்! 

உங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? இனிமேல் எதிர்காலத்தில் இந்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைக்கின்றீர்களா? அப்படியெனில் நீங்கள் கிட்னி ஸ்டோன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? வந்துவிட்டால் எப்படி தடுப்பது போன்றவற்றை பற்றி பார்ப்போம்.

காரணங்கள்:

நமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இதன் வேலை நமது உடலில் உள்ள கழிவு பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது. நமது உடலில் தினமும் மெட்டபாலிசம் நடக்கும். நமது ரத்தத்தில் உள்ள உப்பு மற்றும் வேதிப்பொருட்களை பிரித்து சிறுநீராக சிறுநீர் குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு ரத்தத்தில் இருந்து பிரிக்கக்கூடிய உப்புகள் சிறு சிறு துகள்களாக சிறுநீரகத்தில் படிய கூடும். இவை நாளடைவில் கற்களாக உருமாறக் கூடும். சில சமயங்களில் அவை சிறுநீராக வெளியேறும். ஆனால் சில நேரங்களில் அவை கற்களாக வளர்ந்து கொண்டு செல்லும். வளர்ந்த கற்கள் சிறுநீர் குழாய்க்கு நகர்ந்து வரும் பொழுது நமக்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

1. கற்கள் உருவாவதற்கான முதன்மையான காரணம் உப்பு சத்துக்கள்.

2. நமது உடலுக்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் குறைவாக இருந்தாலும் பிரச்சனை. அதிகமாக இருந்தாலும் தொல்லைகள் ஏற்படும். அதிகமானால் அவை கால்சியம் ஆக்சாலேட், கால்சியம் பாஸ்பேட், மற்றும் யூரிக் ஆசிட் போன்றவை நமது சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.

3. நேர நேரத்திற்கு சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது. தாகம் எடுத்தால் கூட தண்ணீர் குடிக்காமல் அடக்கி வைப்பது.

4. இன்னும் சிலர் உப்பு சத்து அதிகம் உள்ள தண்ணீரை குடிப்பது.

5. அதிக உப்பு, புளி, காரம் இருக்கக்கூடிய உணவுகள் சேர்த்துக் கொள்வது.

அறிகுறிகள்:

சிறுநீரக கற்கள் சிறிய அளவில் இருந்தால் அதாவது 5 mm அளவில் இருந்தால் நமக்கு பிரச்சனை இல்லை. அதுவே புளியங்கொட்டை சைஸ் அளவில் இருந்தால் நமக்கு கடுமையான பிரச்சனை ஏற்படக்கூடும். அதுவும் சிலருக்கு ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கற்கள் வளர்ந்து சிறுநீரகக் குழாயில் அடைப்பு ஏற்படுத்தும். அப்போது சில அறிகுறிகள் ஏற்படும். அவையாவன,

* கிட்னி ஸ்டோன் இருந்தால் முதலில் வரக்கூடிய அறிகுறிகள் இடுப்பு வலி, முதுகு வலி, பிறப்பு உறுப்பில் வலி.

* கல் உருவானால் கீழ் முதுகில் வலி தொடங்கி முதுகு மற்றும் பிறப்புறுப்பில் சென்று முடியும். இந்த வலி உங்களை தூங்கவிடாமல், உட்கார விடாமல் தொல்லைப்படுத்தும்.

* அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.

* சிறுநீரின் நிறம் மாறி இருக்கும். சிலருக்கு சிறுநீரில் ரத்தம் கூட வரும். அடர் பழுப்பு நிறம், அடர் சிவப்பு நிறம் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

* அடிக்கடி சிறுநீர் கழிக்க உணர்வு தோன்றினாலும் வராது. சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் . வெளியிடும் பொழுது உங்களுக்கு அதிக வலி உண்டாகும்.

* உங்களுக்கு குளிர் காய்ச்சல் ஏற்படும்.

வீட்டு வைத்திய முறை:

உங்களுக்கு கிட்னி ஸ்டோன் இருந்தால் கை கொடுக்கக் கூடிய எளிய மூலிகைதான் இரணகள்ளி. இது வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

இந்த இலையை கசக்கினாலே நன்றாக சாறு வரும். இந்த இலையை சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் சிறு, சிறு துகள்களாக உடைக்கப்பட்டு வெளியேறும்.

இதை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். முதல் நாள் காலை வெறும் வயிற்றில் இளம் தளிரான இலையை சாப்பிடவும். அதற்கு அடுத்த நாள் இதைவிட சற்று முதிர்ந்த இலையை சாப்பிடவும். மூன்றாவது நாள் இதை விட பெரிய இலை இப்படியே இலையின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் உங்களுக்கு இருக்கக்கூடிய கிட்னி ஸ்டோன் இயற்கையான முறையில் கரைந்து வெளியேறும்.