தினமும் இருமுறை குளித்தாலும் அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறி அதிக நாற்றத்தை பரப்புகிறது என்று பலரும் புலம்புகின்றனர்.உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது நல்ல விஷயம் என்றாலும் அவை அதிகமாக வெளியேறும் பொழுது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறுகிறது என்பதை அக்குள் காட்டி கொடுத்துவிடும்.நாம் எந்த துணிகளை அணிந்தாலும் அதிக வியர்வை காரணமாக அக்குள் பகுதியில் துணி நினைந்து அசௌவ்கரிய சூழலை உண்டாக்கிவிடும்.
உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேற ஹைப்பர்ஹைட்ரோசிஸ் தான் காரணம்.இது ஒரு வகை நோய் பாதிப்பாக உள்ளது.இதனால் உள்ளங்கை,கால் விரல் மற்றும் கைவிரல் இடுக்கு,முதுகு மற்றும் அக்குள் பகுதியில் அதிகளவு வியர்வை வெளியேறும்.
அக்குளில் இருந்து அதிகமான வியர்வை வெளியேறி உடையை ஈரமாக்குவதால் கைகளை உயர்த்த தயக்கம் ஏற்படும்.எனவே அக்குள் பகுதியில் அதிகமான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்த சில வழிமுறைகளை அவசியம் பின்ப்பற்றுங்கள்.
அக்குள் பகுதியில் சோடா உப்பு பேஸ்டை அப்ளை செய்து குளிப்பதால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.
அக்குள் பகுதியில் முடி இருந்தால் துர்நாற்றத்துடன் அதிகளவு வியர்வை வெளியேறும்.எனவே அக்குள் முடிகளை அவ்வப்போது க்ளீன் செய்யத் தவறாதீர்கள்.
குளித்து முடித்தவுடன் அக்குள் பகுதியை நன்றாக துடைத்த பிறகு துணியை அணியவும்.சபாலிஸ்டர் கலந்த காட்டன் துணிகளை அணிவதால் துணிகளில் வியர்வை அச்சு படிவது தடுக்கப்படும்.அதிகப்படியான வியர்வை வெளியேறும் நபர்கள் காஃபின் உணவுகளை தவிர்க்க வேண்டும்.