நோய் தொற்றுகளுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? இது உயிருக்கே உலை வைத்துவிடும்!

0
163

 

காய்ச்சல்,பாக்டீரியல் தொற்றுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.தொண்டை வலி,காய்ச்சல்,மலேரியா,காலரா போன்று நோய் வகைகளுக்கு ஏற்றவாறு ஆன்டி-பயாடிக் மருந்துகள் வழங்கப்படுகிறது.ஆனால் ஆன்டி-பயாடிக் மருந்துகள் உடலில் தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

நிமோனியா,சுவாச நோய்,மலேரியா,காலரா போன்ற நோய் தோற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டி-பயாடிக் மருந்தான டெட்ராசைக்ளின் மிகவும் ஆபத்தானது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இந்த மருந்தால் வாந்தி,குமட்டல்,சரும அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.டெட்ராசைக்ளின் ஆன்டி-பயாடிக் மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை குணப்படுத்திக் கொள்ள தவறினால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.இந்த டெட்ராசைக்ளின் மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் சிகிச்சை பின் இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இந்திய மருந்தக ஆணையத்திடம் புகாரளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெட்ராசைக்ளின் ஏற்படுத்தும் லேசான பக்கவிளைவுகள்:

 

1)ஆசனவாய் அரிப்பு

2)குமட்டல்

3)கடுமையான வயிற்றுப்போக்கு

4)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு

5)தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டை அடைப்பு

6)நாக்கு வீங்கி போதல்

7)பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு

 

டெட்ராசைக்ளின் ஏற்படுத்தும் கடுமையான பக்கவிளைவுகள்:

 

1)சுவாசப் பிரச்சனை

2)அதீத தலைவலி

3)கண் பார்வை குறைபாடு

4)மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி

5)சரும அலர்ஜி

6)அதிக இரத்தப்போக்கு

7)மார்பு வலி

8)மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்

 

டெட்ராசைக்ளின் ஆன்டி-பயாடிக் மருந்து பயன்படுத்தி மேலே குறிப்பிட்டுள்ள பக்கவிளைவுகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Previous articleநன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!
Next articleஇந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால்.. ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறையும்!!