சும்மா சும்மா கையில் நெட்டி முறிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை.. இதனால் உங்கள் விரலையே இழக்க நேரிடும்!!
அடிக்கடி கை மற்றும் கால் விரல்களில் நெட்டி முறிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்போர் இடுப்பு,கைகளில் நெட்டி முறிப்பதன் மூலம் ஒரு புத்துணர்வை பெறுவது போன்று உணர்கின்றனர்.அதேபோல் தூங்கி எழுந்ததும் உடல் சோர்வை போக்க இடுப்பில் நெட்டி முறிப்பார்கள்.ஆனால் இது மிகவும் தவறான பழக்கம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நமது உடலில் இரண்டு எலும்புகளை கார்டிலேஜ் என்ற ஜவ்வு இணைக்கின்றது.கை,கால்,முதுகு,இடுப்பு,மூட்டு,கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற இரு எலும்புகளை கார்டிலேஜ் என்ற ஜவ்வு இழுத்து பிடிக்கிறது.
நமது உடலில் இருக்கின்ற எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் இருக்க கார்டிலேஜ் உதவுகிறது.நாம் நீண்ட நேரம் உடலை அசைக்காமல் இருந்தாலோ,ஓர் இடத்தில் அமர்ந்தபடி இருந்தாலோ எலும்பு இணைப்பு பகுதிகளில் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது.இதை போக்க நாம் நெட்டி முறிக்கின்றோம்.
இப்படி நாம் நெட்டி முறிக்கும் பொழுது கார்டிலேஜ் ஜவ்வு இழுக்குப்படுகிறது.இதனால் ஜவ்வில் நிரம்பி இருக்கின்ற நீர்குமிழிகள் பலூன் போன்று வெடிக்கிறது.இதனால் தான் நெட்டி முறிக்கும் பொழுது படக் என்று சத்தம் கேட்கிறது.
நெட்டி முறிப்பதால் தீவிர மூட்டு வலி ஏற்படும் என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது.எப்போதாவது நெட்டி முறிப்பதால் மூட்டு ஜவ்வு தேய்மானம் ஆகாது.ஆனால் அடிக்கடி நெட்டி முறிப்பதால் கார்டிலேஜ் ஜவ்வு அதன் ஆரோக்கியத்தை இழக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.நெட்டி சோர்வை போக்குகிறது என்று சொல்லப்பட்டாலும் அதை அடிக்கடி செய்வதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது மூட்டு ஜவ்வுகளுக்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.