எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

Photo of author

By Divya

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

ஜாதகத்தில் கட்டம் சரி இல்லை, தசா புத்தி சரி இல்லை, கோயிலுக்கு சென்று பலன் இல்லை, பரிகாரம் செய்து பலன் இல்லை – இப்படி எல்லாமே கை கொடுக்கவில்லை என்ற நேரத்தில் நிச்சயம் திதி தேவதைகள் கை கொடுத்து உங்களை உயர்த்தி விடுவார்கள்.

வளர்பிறை திதி தேவைதைகள் 15 மற்றும் தேய்பிறை திதி தேவதைகள் 15 உள்ளனர். நீங்கள் எந்த திதியில் பிறந்தீர்களோ அந்த திதிக்கான தேவதையின் படத்தை வாங்கி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வர நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பிறக்கும்.

வளர்பிறை திதி தேவதைகள்:
பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா, துவிதியை – பிரம்மா, திரிதியை – சிவன், சதுர்த்தி – விநாயகர், பஞ்சமி – திரிபுரசுந்தரி, சஷ்டி – செவ்வாய், சப்தமி – இந்திரன், அஷ்டமி – கால பைரவர், நவமி – சரஸ்வதி, தசமி – வீரபுத்திரர், ஏகாதசி – மஹா விஷ்ணு, துவாதசி – மஹா விஷ்ணு, திரியோதசி – மன்மதன், சதுர்த்தி – காளி, பௌர்ணமி – லலிதாம்பிகை.

தேய்பிறை திதி தேவதைகள்:
பிரதமை – துர்க்கை, துவதியை – வாயு, திரிதியை – அக்னி, சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
பஞ்சமி – நாகதேவதை, சஷ்டி – முருகன், சப்தமி – சூரியன், அஷ்டமி – மகா ருத்ரன் மற்றும் பைரவர்
நவமி – சரஸ்வதி, தசமி – எமன், ஏகாதசி – மகாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு, துவாதசி – சுக்ரன்
திரயோதசி – நந்தி, சதுர்த்தசி – ருத்ரர்,அமாவாசை – பித்ருக்கள் மற்றும் காளி.