காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!
ஒரு சிலர் தினமும் சாதம் வடித்த உடன் காகத்திற்கு வைத்த பிறகு தான் உணவு உண்பார்கள். மேலும் ஒரு சிலர் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகத்திற்கு எந்த உணவை வைத்தால் நமக்கு பெரும் பாவம் வந்து சேரும் என்பதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.
முக்கியமாக காகத்திற்கு இந்த இரண்டு உணவுகள் மட்டும் வைக்கக்கூடாது. காகம் சனி பகவானின் வாகனமாக கருதப்படுகிறது. மேலும் எமதர்மனுக்கு மிகவும் பிடித்த பறவை என்றால் அது காகம் தான். எமலோகத்தின் நுழைவாயிலில் காகம் இருப்பதாக ஐதீகம்.
காகம் என்பது மனிதர்களுடன் மிக நெருக்கமாக பழகும் தன்மை உடையது. ஆன்மீக ரீதியாகவும் காகத்திற்கு முக்கிய இடம் உண்டு. நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவமாக உள்ளனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றது. காகத்திற்கு தினமும் உணவளித்தால் நம் வீட்டில் ஏற்படும் திடீர் அசம்பாவிதம், விபத்து , எத்தனை ஜென்மத்து பாவமாக இருந்தாலும் காகத்திற்கு தினமும் தவறாமல் உணவு வைப்பவர்களுக்கு அந்த பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
காகம் நம் வீட்டின் கதவு அல்லது ஜன்னல் பக்கத்தில் இருந்து கரைந்து கொண்டே இருந்தால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்துள்ளது என்று அர்த்தம். நம் வீட்டில் நீண்ட நேரம் காகம் கரைந்து கொண்டே இருந்தால் அன்று தினம் நமக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்பது நம்பிக்கை.
காகத்திற்கு எப்பொழுதும் மாமிச உணவு வைக்க கூடாது. அசைவ உணவு சாப்பிடும் பறவையாக இருந்தாலும் நம்முடைய கையால் அதற்கு மாமிச உணவு அளிக்கக் கூடாது. அடுத்ததாக பழைய உணவு அல்லது எச்சில் பண்டங்களையோ காகத்திற்கு வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் அளவற்ற பாவங்கள் உண்டாகும்.