உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

0
531

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

புதன் ஆதிக்கம் நிறைந்திருப்பதனால் நம் வீட்டில் எந்த அளவிற்கு செல்ல செழிப்பாக இருக்கும் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். புதன்கிழமை அன்று பெருமாளுக்கு விளக்கு ஏற்றும் பொழுது முழு பச்சை பயிறு வைத்து அதன் மேல் பித்தளை விளக்கு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உண்டாகும். மேலும் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது நம் குழந்தைகள் படிக்கும் அறையிலோ உள்ள பேனா வைக்கும் இடத்தில் பச்சை நிற மை கொண்ட பேனாவை அல்லது பச்சை நிற பேனாவை வைக்க வேண்டும் அவ்வாறு வைத்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

அதனையடுத்து உங்கள் வீட்டில் சிறிது தங்கம் கூட இல்லை என்றாலும் கவலை வேண்டாம் அதற்கு மஞ்சள் தூள் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு குங்குமம் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைத் துணியை நன்றாக மஞ்சளில் நனைக்க வேண்டும். பிறகு அதனை இரண்டு துணியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

முதலில் ஒரு துணியில் ஒரு கைப்பிடி அளவு மஞ்சளும் மற்றொரு துணியில் ஒரு கைப்பிடி அளவு குங்குமமும் வைக்க வேண்டும். மேலும் மஞ்சளில் 1/2 கிராம் தங்க நாணயம். குங்குமத்தில் 1/2 கிராம் தங்க நாணயம் வைக்க வேண்டும். இரண்டு துணியையும் தனித்தனியாக முடிந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு துணையையும் கையில் வைத்துக்கொண்டு பெருமாளை மனதார வேண்டிக்கொண்டு வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் பெயரை சொல்லி நகைகள் சேர்க்க வேண்டும் என வேண்டுதல் வைக்க வேண்டும்.

மேலும் அதனை தென்மேற்கு மூலையில் பச்சை கற்பூரம், வசம்பு இதை சேர்த்து ஒரு டப்பாவில் போட்டு அதில் பெருமாள் படம் ஒன்று வைத்து வழிபட வேண்டும் அதன் பிறகு உங்களால் எப்போது திருப்பதிக்கு செல்ல முடிகின்றதோ அப்போது அதன் இரண்டையும் எடுத்துச் சென்று திருப்பதி உண்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறுசெய்து வந்தால் வீட்டில் தங்கம் பெருகும்

 

Previous articleகாகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!
Next articleசொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here