உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!

0
123

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் கொசுக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துவிட்டது.

கொசுக்கள் பரவலால் மலேரியா,டெங்கு போன்ற நோய் பாதிப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.ஏடிஎஸ் என்ற கொசு உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நோய்களை பரப்பக் கூடியவையாக இருக்கிறது.

கொசுக்கள் நமது இரத்தத்தில் கிருமி மற்றும் தொற்றுக்களை பரப்புகிறது.இந்த கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக கடிக்கும்.சிலருக்கு கொசுக்கடியால் தோல் தடிப்பு,அரிப்பு,புண்கள் ஏற்படும்.ஏன் கொசுக்கள் சிலரை மட்டும் குறிவைத்து கடிக்கிறது என்பது குறித்து தெரிந்தால் நிச்சயம் ஷாக் ஆகி விடுவீர்கள்.

கொசுக்கள் யாரை அதிகமாக கடிக்கும்?

**சருமத்தில் வெளிப்படும் Carboxylic acids என்ற ஒருவகை அமிலம் கொசுக்களை ஈர்க்கிறது.இந்த அமிலம் சருமத்தில் இருந்து வெளியேறுகிறது.Carboxylic acids அதிகம் வெளியேறும் மனிதர்களை கொசுக்கள் அதிகம் விரும்புகிறது.

**அதேபோல் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாக வெளியிடுபவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கிறது.நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடை வைத்து கொசுக்கள் எளிதில் நம்மை கண்டறிந்தவிடும்.யார் அதிகமாக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுகிறார்களோ அவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கும்.

**யாருக்கு உடலில் இருந்து அதிக வெப்பம் வெளியேறுகிறதோ அவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கும்.

இந்த உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் கொசுக்கள் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே முடிந்தவரை உங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Previous articleவாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?
Next articleவொயிட் ஆனியன் Vs ரெட் ஆனியன்: உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது?