மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்கால செலவுகளையும் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என பல்வேறு வகையில் சேமிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சேமிப்புகளில் எப் டி முக்கியமான ஒரு சேமிப்பு தளமாக உள்ளது. எனினும் எப்டி யில் பணம் போடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது அதில் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என பலரும் குழம்பியுள்ளனர்.
பாதுகாப்பான மற்றும் முறையான முதலீடு செய்வதால் அதற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்பதற்கான ஒரு திட்டத்தினை இந்த பதிவில் காணலாம். அஞ்சலக சேமிப்பு திட்டம் மூலம் எப்டி பணம் போடக்கூடியவர்களுக்கு மூன்று மடங்கு லாபம் கிடைக்கும். அதோடு பணமும் மிகவும் பத்திரமாக இருப்பதற்கு பலரும் தற்பொழுது அஞ்சல் துறையை தான் தேர்வு செய்கின்றனர்.
உதாரணத்திற்கு, அஞ்சல் துறையில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்றால் அவருக்கு 30 லட்சம் ரூபாயாக திரும்ப கிடைக்கும். அதற்கான பலன் 20 இலட்சமாக உயர்ந்திருக்கும். அஞ்சல் நிலையங்களில் உள்ள வைப்பு நிதி திட்டங்கள் பல கால பிரிவுகளை கொண்டிருக்கின்றது. நாம் தேர்வு செய்யக்கூடிய கால அளவை பொறுத்து அதற்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
✓ 5 ஆண்டுகள் கால அளவீட்டைக் கொண்ட திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த வட்டி விகிதத்தின் மூலம் 10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.4,49,948 கிடைக்கும்.
✓ மேலும் இதில் வரக்கூடிய மொத்த தொகையான ரூ.14,49,948 முழுவதையும் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் பட்சத்தில் மொத்தமாக ரூ. 21,02,349 கிடைக்கும். இதேபோன்று நமக்கு தேவையான கால அளவில் மீண்டும் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.