ஆணுறுப்பு விறைப்பு தன்மை பிரச்சனையால் துணைக்கு முழு இன்பம் தர முடியவில்லையா?? தேனை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

ஆண்களுக்கு விறைப்புத் தன்மை கோளாறு அதிகரித்து வரும் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது.ஊட்டச்சத்து குறைவான உணவுகள்,சோம்பேறி வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்காமல் போனாலும் விறைப்புத் தன்மை ஏற்படும்.எனவே விறைப்புத் தன்மையை அதிகரிக்க கீழ்கண்ட இயற்கை வைத்தியங்களை ஆண்கள் செய்து பார்க்க வேண்டும்.

Tips 01

தேவையான பொருட்கள்:

1)தூதுவளை பூ – 10
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடாக்கி கொள்ளுங்கள்.

பிறகு 10 தூதுவளை பூவை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு கொதிக்க விடுங்கள்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் ஆண்மை அதிகரிக்கும்.

Tips 02

தேவையான பொருட்கள்:

1)பாதாம் பிசின் – இரண்டு தேக்கரண்டி
2)முருங்கை பிசின் – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – மூன்று தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

பாதாம் பிசின் மற்றும் முருங்கை பிசின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.

பிறகு இதை வாணலியில் போட்டு லேசாக சூடு படுத்தி ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் கிண்ணத்தை எடுத்து அரைத்த பிசின் பொடியை கொட்டி மூன்று தேக்கரண்டி தூயத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

Tips 03

தேவையான பொருட்கள்:

1)அத்திப்பழம் – இரண்டு
2)தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் இரண்டு பிரஸ் அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிடுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.