ஓயாமல் சிறுநீர் கழிக்கிறீர்களா? அப்போ இந்த கஷாயம் குடித்தால் இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

Photo of author

By Divya

சிறுநீரக தொற்று,சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இன்சுலின் அளவு குறைகிறது.இதனால் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை பில்டர் செய்யும் வேலையை சிறுநீரகங்கள் செய்கிறது.தொடர்ந்து சர்க்கரையை வடிகட்டும் பணியை சிறுநீரகங்கள் செய்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.இதனால் சிறுநீரகத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இப்படி உடலில் நீர்ச்சத்து குறையும் போது அதிகளவு தண்ணீர் தாகம் ஏற்படும்.இதனால் அதிக தண்ணீர் அருந்தி அடிக்கடி சிறுநீர் கழிக்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறோம்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள கஷாயத்தை செய்து பருகவும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை கண்ட்ரோல் செய்யும் மூலிகை கஷாயம்:

தேவையான பொருட்கள்:-

கடல் அழிஞ்சில் – 15 கிராம்
பருத்திவிதை – 15 கிராம்

பயன்படுத்தும் முறை:-

நாட்டு மருந்து கடையில் கடல் அழிஞ்சில் மற்றும் பருத்திவிதை கிடைக்கும்.இவை இரண்டையும் 15 கிராம் அளவிற்கு தனி தனியாக வாங்கிக் கொள்ளவும்.

பிறகு இதை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 500 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்ததாக இடித்து வைத்துள்ள கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதையை போட்டு கொதிக்க வைக்கவும்.

500 மில்லி தண்ணீர் 250 மில்லியாக வரும் வரை கஷாயத்தை மிதமான தீயில் நன்கு கொதிக்கவிடவும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை,மதியம்,இரவு என மூன்றுவேளை குடித்து வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாது.