சிறுநீர் கழிப்பதால் உடலில் கழிவுகள் தேங்குவது தடுக்கப்படுகிறது.எனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனே அதை வெளியேற்றிவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் நாளடைவில் சிறுநீரகம் பழுதடைந்துவிடும்.
இருப்பினும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் அவை கவனிக்கப்பட கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.
சிலருக்கு 5 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இதனால் உடல் சோர்வு அதிகளவு ஏற்படக் கூடும்.உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருந்தால் நீங்கள் சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் சுகர் இருக்கா? என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.சிறுநீரகப் பாதையில் தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
கல் அடைப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.உடலில் உப்பு கரைசல் அதிகம் தேங்கி இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.எனவே தாது உப்புகள் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்ளவும்.
சாதாரணமாக நாளொன்றுக்கு பகல் நேரத்தில் 6 முறை மற்றும் இரவு நேரத்தில் 2 முறை என்று 8 முறை சிறுநீர் கழிக்கலாம்.அதற்கு அதிகமான சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிறுநீர் பாதையில் அதிகப்படியான தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற தோன்றும்.எனவே உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறுகிறது என்றால் நீங்கள் அலட்சியம் கொள்ளாமல் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.