நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

0
189

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது.

புதியதாக அச்சிடப்பட்ட நோட்டுகள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி முதல் புழக்கத்திற்கு வந்தது.புதியதாக உருவாக்கப்பட்ட நோட்டுக்களில் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு உருவாக்கப் பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் 2018-ஆம் ஆண்டை ஒப்பிடும் பொழுது, கடந்த 2019 ஆம் ஆண்டு அதிக அளவு கள்ளநோட்டுகள் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்தது.

அதிலும் குறிப்பாக 2019-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 25 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 17 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டை பொறுத்தவரை, கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையில் 90 ஆயிரம் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் கள்ளநோட்டுகளை பயன்படுத்தும் மாநிலங்களில் கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகாவில் 23,599 ரூ.2000 நோட்டுகளையும், குஜராத் மாநிலத்தில் 14,494 ரூபாய் கள்ளநோட்டுகளும், மேற்குவங்காளத்தில் 13,063 ரூபாய் கள்ள நோட்டுகளும் பிடிக்கப்பட்டுயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை 32,910 எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் ,இந்த எண்ணிக்கையில் 2020 மார்ச் 31-ஆம் தேதி 27,398 குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஆன அனுராத் தாகூர் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில் பயன்படுத்தும் மக்கள் அவற்றை சரி பார்த்து பயன்படுத்த வேண்டும் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் மக்களிடையே அறிவுறுத்தியுள்ளது.

Previous articleமருத்துவமனையில் இருந்து வந்த நல்ல செய்தி..!! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!!
Next articleபுற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!