நீங்கள் வெஜிடேரியனா? அப்போ இந்த “பலாக்காய் பிரியாணி” ட்ரை பண்ணுங்க!! அசைவமே தோற்று விடும் இப்படி செய்தால்!!

0
57
#image_title

நீங்கள் வெஜிடேரியனா? அப்போ இந்த “பலாக்காய் பிரியாணி” ட்ரை பண்ணுங்க!! அசைவமே தோற்று விடும் இப்படி செய்தால்!!

நம் தென்னிந்தியர்களின் விருப்ப உணவுப் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது பிரியாணி தான்.இந்த பிரியாணியின் சிக்கன்,மட்டன்,பிஸ்,முட்டை பிரியாணி,தக்காளி பிரியாணி என்று பல வகை இருக்கிறது.அதில் ஒன்று தான் ‘பலாக்காய் பிரியாணி’.இவற்றை அதிக சுவையாகவும்,மணமாகவும் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*பாஸ்மதி அரிசி – 1 கப்

*எண்ணெய் -5 தேக்கரண்டி

*நெய் – 2 தேக்கரண்டி

*தக்காளி – 2

*பெரிய வெங்காயம் – 4

*பச்சை மிளகாய் – 3

*தயிர் – 1/4 கப்

*இஞ்சி – ஒரு துண்டு

*பூண்டு – 8 பற்கள்

*ஏலக்காய் – 2

*ஜாதி பத்திரி – 2

*இலவங்கம் – 4

*பட்டை – 2

*ஏலக்காய் – 3

*பலாக்காய் – 400 கிராம்

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

*கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

*புதினா – ஒரு கைப்பிடி

*எலுமிச்சை பழச்சாறு -1 தேக்கரண்டி

செய்முறை:-

பிரியாணி செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை இரண்டு முதல் மூன்று முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அரிசி முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற போடவும்.

பின்னர் பலாக்காயை எடுத்து அதன் மேல் தோல்களை சீவி கொள்ளவும்.அதன் பின் பலாக்காயின் நடுவில் இருக்கும் மொத்தமான தண்டு போன்ற பகுதியை நீக்கவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும்.பின்னர் அதை தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாக்காயை போட்டு வதக்கவும்.பின்னர் பாதி வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இந்த பலாக்காயை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள்,தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் இதை 20 நிமிடம் ஊற போடவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி,ஜாதிபத்ரி,ஏலக்காய்,பட்டை,இலவங்கம் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.

அடுப்பை பற்றவைத்து அதில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் பட்டை,இலவங்கம்,ஏலக்காய்,பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி, அரைத்த விழுது,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சை வாசனை நீங்கியபின் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பின்னர் ஊற வைத்த பலாக்காய் சேர்த்து நன்கு கிளறவும்.

தொடர்ந்து கருவேப்பிலை,புதினா,கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் பிரியாணி செய்ய 1 கப் பாஸ்மதி அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

பின்னர் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கிண்டவும்.அதன் பின் பிரியாணி செய்யும் பாத்திரத்தை காற்று புகாதவாறு மூடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்துள்ள பிரியாணி பாத்திரத்தின் மேல் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.பிறகு அடுப்பை அணைக்கவும். பிறகு வாசனைக்காக நெய் சேர்த்து ஒரு முறை கிளறவும்.