உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்தால் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் வரும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள சில மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை பவுடராக அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டிய்
5)பெரு நெல்லிக்காய் வற்றல் – இரண்டு தேக்கரண்டி
ஈரம் இல்லாத வாணலியில் ஓமம் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தனி தனியாக வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி பெரு நெல்லிக்காய் வற்றலை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடானதும் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவிற்கு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை காலை,மாலை நேரத்தில் பருகினால் உடல் எடை சீக்கிரம் குறையும்.
1)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருகி வந்தால் உடல் பருமன் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.
1)திரிபலா சூரணம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து வெறும் வயிற்றில் பருகி வந்தால் கொழுப்பு கரைந்து கட்டுக்கோப்பாக இருக்கலாம்.
1)எலுமிச்சை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இந்த நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை அதில் கலந்து பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும்.