தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! 

0
220

தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! 

புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கான மானிய உதவிகளையும் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பொருட்களை விற்பதற்கு தொழில் தொடங்க விரும்பும் முனைவோருக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், உள்ளிட்ட 225க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து ஆவின் பொருட்களின் விற்பனையை விரிவு படுத்துவதற்கும்,  தொழில் தொடங்க விருப்பமுள்ள முனைவோருக்கும் ஏற்றவாறு திட்டம் ஒன்றினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி  ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருட்களை தள்ளு வண்டியில் வைத்து  விற்பனை செய்வதற்கு  விருப்பமுள்ள சென்னை சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் வேலை இல்லாமல் இருக்கும் பல்வேறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

Previous articleஇன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
Next articleபிரபல தமிழ் நடிகரை காதலிக்கும் மலையாள நடிகை! இணையத்தில் வைரலான பிறந்தநாள் புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here