அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Rupa

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!
இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அவர்களின்
குறிப்பாணையின்படி செப்டம்பர் 2022-ல் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கான விண்ணப்பங்கள்
https://skilltraining.tn.gov.in/DET/, என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து
கொள்ளவும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க
வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவருக்கு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறையின் மூலம் மின்கம்பி உதவியாளர் தகுதிசான்றிதழ் வழங்கப்படும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேனி, அரசினர் தொழிற்பயிற்சி இந்நிலையத்திற்கு
கிடைக்க வேண்டிய கடைசிதேதி 26.07.2022,என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
தேனி மாவட்ட ஆட்சியர்  அவர்களை நேரிலலோ அல்லது 04546-291240, 291241 ஆகிய தொலைபேசி எண்களைதொடர்பு கொண்டு, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.