திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

Photo of author

By Gayathri

உலகில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம் இந்தியா சர்க்கரை நோய்க்கான பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.இந்தியர்களுக்கு சர்க்கரை வர முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான்.

 

ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது முடியாது.இதனால் சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அரிசி உணவுகளை குறைத்துக் கொண்டு சப்பாத்தி சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சக்கரையை கட்டுக்குள் வைக்க உதவும்.எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை ஜூஸ் செய்து பருகி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.இனிப்பு உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

 

ஒருவேளை இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிட்டால் அதை கோவைக்காய் ஜூஸ்,கொத்து அவரை ஜூஸ் போன்றவற்றை பருகி கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.வெண்டைக்காய் நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தினமும் காலையில் எழுந்ததும் 10 வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.இலவங்கப்பட்டையை பொடித்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.உணவில் வினிகர் சேர்த்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சாதாரண காபி,டீயை தவிர்த்துவிட்டு மூலிகை தேநீர் செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.