சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

Photo of author

By Sakthi

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடும் திரும்பும் வழியில் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதியினர் திடீரென்று ஆற்றில் குதித்தனர். இதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பெனுகொண்டா மாவட்டம் மோர்தாவில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் சத்தியவாணி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஆன தம்பதியினர் சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றனர்.

சினிமா முடிந்து வீட்டுக்கு தியேட்டரில் இருந்து பைக்கில் புதுமணத் தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள கோதாவரி ஆற்றில் குதித்தனர்.

இருவரும் ஆற்றில் குதிப்பது ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆற்றில் குதித்த சிவராமகிருஷ்ணன் அவர்களை காப்பாற்றினர். ஆனால் மனைவி சத்தியவாணியை மீனவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

மனைவி சத்தியவாணி பரிதாபமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறிந்த காவல் துறையினர் சிவராமகிருஷ்ணன் அவர்களை கைது செய்தனர். சிறிய தகராறு காரணமாக ஆற்றில் குதித்த கணவன் மற்றும் மனைவி இருவரில் மனைவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.