மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

0
237
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சந்திர பகவான் சுபா ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் பிரயாணம் உண்டாக்கலாம். அதன் மூலம் சொத்து சேர்க்கை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வந்து பேசுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயண வாய்ப்புகள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்னவென்று தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமுடிக்கு சாயம் பூசும்போது சருமத்தில் சாயம் ஒட்டிவிட்டதா? இனி கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் !
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் மகிழ்ச்சி அளிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here