மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!

0
239
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே எந்த பிரச்சனைகளும் இல்லை என்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் அதிகமாக இருப்பதால் முன்னேற்றம் தெரியவரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முக்கியமான வாய்ப்புகள் மேம்படும்.

மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?  இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்!
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here