பாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?  இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்!

0
502
#image_title

பாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?  இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்! 

இன்று அனைத்து வயதினரிடையே பெரும் பிரச்சினையாக எழுந்து வருகின்றது பாதங்களில் எரிச்சல்.

இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். இப்படி பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்பு அல்லது கோளாறுகள் காரணமாக இருக்கலாம்.

அதுமட்டுமின்றி உடலில் சில உறுப்புகளின் பாதிப்புகள் ஏற்பட்டாலும் இந்த பிரச்சினை அதிகமாக அனுபவிக்க வேண்டியது உள்ளது.

ஒருவரது பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், அவர்களது பாதங்கள் வீங்கியோ, சிவந்தோ, தோல் உரிந்தோ, சரும நிறம் சற்று மாறுபட்டோ, தாங்க முடியாத எரிச்சலையோ சந்திக்க நேரிடும்.

இந்த பிரச்சினையில் இருந்து விடுபடும் சில இயற்கை வழிகளை பார்ப்போம்.

விரல்களில் உள்ள வலி குணமாக;– விரல்கள் அனைத்தையும் தினமும் ஐந்து நிமிடம் நீட்டி மடக்கும் பயிற்சியை செய்யவும்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக;– மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளில் பற்றுப் போடலாம்.

உள்ளங்கால் எரிச்சல் குணமாக ;– பாகல் இலை சாறை தடவலாம்

கால் எரிச்சல் குணமாக ;– சுரைக்காய் சதையை வைத்து கட்டலாம்

கை கால் எரிச்சல் குணமாக ;– வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம்.

*. பழங்காலத்தில் நாம் மருதாணியை அதிகம் பயன்படுத்துவதுண்டு. அதை இப்போதும் பயன்படுத்தினால் பாத எரிச்சல் குறையும். மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.

*. சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும், பாத வெடிப்பு குணமாகும்.

*. இரவு உறங்கும் முன்பு வெந்நீரில் சிறுது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் காலை ஊற வைத்து பின் சுத்தமான நீரில் கால்களை சுத்தம் செய்து, நன்கு துடைத்து விட்டு பின் சுத்தமான தேங்காய் எண்ணையை காலில் தடவுவதன் மூலம் கால் எரிச்சல் குறையும்.