மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

0
78
#image_title

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். என்றைக்கோ செய்து முடித்த வேலைக்கு வராத வருமானம் வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே அற்புதமான சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில அதிர்ஷ்டகரமான தகவல் வந்து சேரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவிற்கு மேலதிகாரிகள் அனுசரணையாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான தகவல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani