மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! 

0
159
The electricity bill is so high.. The shop owners are shocked!!
The electricity bill is so high.. The shop owners are shocked!!

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!!

மின்கட்டணம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் யார் யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு இருக்கும் என்பதை தற்பொழுது தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வீட்டு இணைப்புகள், இலவசமாக வழங்கப்படும் மானியம் மின்சாரம் அதாவது குடிசை இணைப்புகள் என தொடங்கி வேளாண் இணைப்புகள் வழங்கும் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.இதனை தவிர்த்து வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறியுள்ளனர்.

வணிக நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசானது  மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை பொறுத்து நுகர்வோர்களிடம் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு உயர்த்திய கட்டணத்தை நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும் எனவும் கூறி இருந்தனர். இதனையடுத்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.மேலும் அடுத்தடுத்து வரும் நான்கு ஆண்டுகளிலும் ஜூலை மாதம் முதல் தேதியிலேயே கட்டண உயர்வானது அமலுக்கு வரும் எனக் கூறியிருந்தனர்.

அந்த வகையில் இந்த கட்டண உயர்வானது முந்தைய ஆண்டையும் தற்போது ஆண்டையும் ஒப்பீடு செய்து கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் தான் மின் கட்டண உயர்வு குறித்து தகவல்கள் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டை கணக்கீடு செய்யும் பட்சத்தில் 4.7 சதவீதம் மின் கட்டணமானது தற்பொழுது உயர்த்தப்பட வேண்டும்.

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், தற்பொழுது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறியீட்டு எண்ணையும், இந்த வருடம் ஏப்ரல் மாதம் குறியீட்டு எண்ணையும் எடுத்து ஒப்பீடு செய்து பார்த்துள்ளனர்.அவ்வாறு பார்த்ததில் 4.7% லிருந்து  2.18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த கட்டண உயர்வை வீட்டு இணைப்புகள் மேல் திணிக்காமல் அதனின் மொத்த பொறுப்பையும் தமிழக அரசே ஏற்று மின்வாரியத்திற்கு மானியமாக வழங்க முடிவு செய்துள்ளனர். எனவே வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளில் உள்ளவர்களுக்கு மட்டும் தற்பொழுது மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அதுவும் குறைந்த அளவில்தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.