மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள்!!

0
80
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். குழந்தைகளுக்கு என்று நீங்கள் நல்ல செயல்களை செய்து முடிப்பீர்கள் அதன் வழியாக நல்ல செய்தி கண்டிப்பாக கிடைக்கும். வருமானம் ஓரளவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் சில மன குழப்பங்களுக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் துணை புரிபவரிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே குழந்தைகள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான வளர்ச்சி காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani