மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றி கிடைக்கும் நாள்!

0
201
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றி கிடைக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ராசியில் லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் அதிக நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள். நிதி நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது.

கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் இலாபகரமாகவும் செல்லும். கொடுக்கல் வாங்கல் மிக அற்புதமாக உள்ளது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஆண் பெண் இருவருக்கும் உள்ள பாலியல் பிரச்சனைக்கு இந்த 3 போதும்!!
Next articleஉங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி அடிக்கும் ஓர் குழம்பு! உடனே ட்ரை பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here