மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்!

Photo of author

By CineDesk

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்!

CineDesk

Updated on:

Aries – Today's Horoscope!!Business will be wonderful!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் சாயங்காலம் வரைக்கும் சுப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பார். அதற்கு பிறகு பஞ்சாமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு போகிறார். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆகையால் சரியான நேரத்திற்கு சரியான உணவை எடுத்துக் கொண்டால் இந்த நாள் நன்றாக அமையும்.

குடும்ப உறவுகள் இன்று மிக அருமையாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் புரிதலுடன் காணப்படுவீர். உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரம் இன்று சிறப்பான சூழ்நிலையில் இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பணியிட மாறுதல் சாய்ந்திரத்துக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும் கவலை கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம் என்பது இன்றைக்கு உங்களுக்கு ஓரளவுக்கு சிறப்பா இருந்தாலும் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் ஒரு சிறப்பான சூழ்நிலை கண்டிப்பாக உள்ளது மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் இந்த தேதியில் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடையை அணிந்து சரஸ்வதி தேவி வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.