குடியிருப்பு பகுதியில் புகுந்து அரிக்கொம்பன் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!!
சுற்றுலாப் பயணிகள் மேகமலை பகுதிக்கு செல்வதற்கு வனத்துறை தடை. மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிக்கொம்பன் நடமாட்டம் உள்ளதால் மேகமலை பகுதியில் தேனி மாவட்ட வன அலுவலர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் 20 பேரை மிதித்து கொன்ற பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழக கேரளா எல்லைப் பகுதியில் விடப்பட்ட அரிக் கொம்பன் என்னும் யானை.
தற்போது தேனி அருகே உள்ள மேகமலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் தனது அட்டகாசத்தை துவக்கி உள்ளது.எனவே மக்கள் எசரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.