நடிகையை தொடர்ந்து பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Photo of author

By Savitha

நடிகையை தொடர்ந்து பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Savitha

Updated on:

தமிழில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன், அர்ஜுன் தாஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. அதன்பின்னர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது பாடகி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.Arjun Das's picture with singer Malavika causes a stir among fans | Tamil  Movie News - Times of India

நடிகர் அர்ஜுன் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகி மாளவிகாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்துடன் அவர் சில வரிகளையும் சேர்த்திருக்கிறார், அதில் ‘ உணவுக்கு பிறகு சிறிது நேரம் தூங்க முடிவு செய்தேன், மாளவிகாவிற்கு இதில் மகிழ்ச்சி இல்லை, நாம் இன்னும் நிறைய புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர் இப்படி மற்றவர்களுடன் இருப்பதை பார்க்கையில் பொறாமையாக இருக்கிறது என்று பலவாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.