நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!

Photo of author

By Jayachandiran

நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தஞ்சை பெரிய கோயிலில் வழிபட்ட போது நடிகர் விஜயை பற்றி முக்கிய குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் முன்வைத்தார். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்து தனது நண்பர்களின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதாக கடுமையாக சாடினார். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்த காரணம், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்கிற அடிப்படையில் சோதனை நடக்கிறது. இதை சிலர் ரஜினியுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் விஜயை தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில், ரஜினியின் வீட்டிலும் வருமானவரி சோதனை அதிரடியாக நடத்தப்பட்டது. பிறகு அதன் மூலம் சில ஆவணங்களும் கிடைத்தது உண்மைதான். சோதனையின் முடிவுக்கு பின்னர் வருமான வரித்துறையினரே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கியதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்யும் சோதனை நடப்பதாக கூறினார்.

விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்தும் அதன் வருமானத்தை வைத்தும் கிறித்தவ மதத்தை பரப்புவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த பேட்டியினால் சில விஜய் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பு கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அமீர் ,விஜயை பார்த்து அவ்வளவு பயமா என்று அர்ஜூன் சம்பத்தை நோக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது.