அக்குள் கருமை, தொடை கருமை, கழுத்து கருமை 5 நிமிடத்தில் நீங்கிவிடும்!

0
2107

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கழுத்துப் பகுதிகளில் கை முட்டிகளில் கருமையாக இருக்கும்.

இந்த கருமையானது பல காரணங்களால் ஏற்படுகின்றது. ஒன்று நாம் முறையாக அதை சுத்த படுத்தாவிட்டால் கருமையாகிவிடும்.

ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் கூட கழுத்து பகுதியில் கருமை படிந்து விடும். ஒரு சிலருக்கு கவரிங் நகைகளை போடும் பொழுது கழுத்தில் கருமையாகிவிடும்.

அனைத்து விதமான இந்த கருமையை இரண்டே நிமிடத்தில் நீக்க இந்த முறையை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

1. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

2. மஞ்சள் அரை டீஸ்பூன்

3. எலுமிச்சை பழ சாறு அரை ஸ்பூன்.

4. அரிசி மாவு 2 ஸ்பூன்

5. சர்க்கரை அரை ஸ்பூன்

6. காபித் தூள் அரை ஸ்பூன்.

7. தக்காளி -1

செய்முறை:

1.முதலில் ஒரு பௌலில்   2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்,  1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 எலுமிச்சைப் பழ ஜூஸை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

2.அதை அப்படியே வைத்துவிட்டு இன்னொரு பௌலில் அரிசி மாவு 2 டீஸ்பூன்,சர்க்கரை  1/2 ஸ்பூன் , காபித் தூள் 1/2 டீஸ்பூன். ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 1/2 தக்காளி ஜூஸ் பிழிந்து நன்கு பேஸ் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

1.முதலில் எங்கு கருமையான பகுதிகள் இருக்கிறதோ அங்கே முதலில் சுத்தமான தண்ணீரால் துடைத்து விட்டு முதலில் தயார் செய்த தேங்காய் எண்ணெய், மஞ்சள், எலுமிச்சை சாறு கலவையை பூசி நன்றாக தேய்த்து விடவும்.

2.3 நிமிடம் கழித்த இரண்டாவதாக தயார் செய்த அரிசி மாவு கலவையை பூசி மீதமிருக்கும் அரை தக்காளி கொண்டு அனைத்து பகுதிகளிலும் நன்றாக தேய்க்கவும்.

3. 5 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்து விடவும்.

இப்படி இரண்டு முறை செய்தாலே போதும் கருமை நீங்கி உங்கள் கருமை நிறம் வெண்மையாக மாறி விடும்.

Previous articleஇந்த நீரை ஒரு மாதம் குடித்தால் உங்கள் உடலில் ஏற்படும் அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleஅதிர்ச்சி தகவல்.. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை கெடுதல் ஏற்படுமா?