பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

Photo of author

By Anand

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

Anand

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலையில் அவர் தன்னுடைய வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த வந்த செம்பியம் போலீசார் அவரை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டி சாய்த்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் எதிரியாக பார்த்து வரும் வன்னியர் மற்றும் தலித் மக்களின் ஒற்றுமை குறித்து பல்வேறு மேடைகளில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.