அண்ணனுக்கு நினைவு நாள் பரிசாக கொடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உயிர்- தம்பி கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்!!
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது.குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலையானது முன் விரோத காரணமாக நடைபெற்றது எனக் கூறுகின்றனர்.கடந்த வருடம் ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதவன் இருவரும் உணவு அருந்தி கொண்டிருக்கும் பொழுதே இதே போல மர்ம கும்பலால் சுரேஷ் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டார்.இதற்கு முன்பே ஆற்காடு சுரேஷ் பெயரில் கொலை வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தகது.
குறிப்பாக இவரது கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் பின்னணியில் இருந்து திட்டம் தீட்டியதாக பல தகவல்கள் வெளியானது.மேலும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு சம்பந்தமாக 11 பேர் கைதும் செய்யப்பட்டனர்.இதனை பழிவாங்கும் நோக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ஆம்ஸ்ட்ராங்-கை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.குறிப்பாக அவரது அண்ணன் பிறந்தநாள் அல்லது நினைவு நாள் அன்றே ஆம்ஸ்ட்ராங் கை கொலை செய்தாக வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்துள்ளார்.
அதன்படி நேற்று, எப்படி ஆற்காடு சுரேஷ் மர்ம கும்பலால் தாக்கப்பட்டாரோ அதேபோல ஆம்ஸ்ட்ராங்கும் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்பொழுது வரை எட்டு பேர் சரணடைந்துள்ளனர்.அதில் ஆற்காடு சுரேஷ் தம்பி பாலு-வும் ஒருவர்.போலீசார் விசாரணையில் தனது அண்ணனின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.