பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

0
150

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:!விருதுநகர் அருகே பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தில் அய்யங்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது முதல் மகன் அஜித் குமார் என்பவர் ராணுவத்தில் பணி புரிகின்றார்.இரண்டாவது மகன் சுந்தரபாண்டி என்பவர் காவல்துறை பணிக்காக தேர்வு எழுதி பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று இரவு இவர்கள் மூவரும் வயல்வெளிக்கு செல்வதற்காக சிவகங்கை மாவட்டம் மரநாடு கிராமம் வயல் வழியாக சென்றனர்.அப்பொழுது ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் கரும்பு தோட்டத்தில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதனால் சட்டத்திற்கு புறம்பாக மின் கம்பிகளை போட்டுள்ளார்.

இதனை அறியாமல் இம் மூவரும் அவரின் வயல்வழியாக சென்றபோது ஒருவரின் பின் ஒருவர் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.வயல்வெளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததனால் அவர்களது உறவினர்கள் தேடிச் சென்றபோது வயல்வெளியில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்த கிடப்பது கண்டறியப்பட்டது.

இதில் அஜித் குமார் என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது.தனது குழந்தையை காண்பதற்காக வீட்டிற்கு வந்த ராணுவ வீரர், மறு நாளே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்ததினால் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றும்,விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அதிக காட்டு பன்றிகளின் தொல்லை இருப்பதனால் அவற்றை பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மென்றும் அக்கிராமத்து மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Previous articleகன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!
Next article”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா