அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்! திருமாவளவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் கோரிக்கை

0
173
Protest against Thirumavalavan-News4 Tamil Latest Online Tamil News Today
Protest against Thirumavalavan-News4 Tamil Latest Online Tamil News Today

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்! திருமாவளவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் கோரிக்கை

புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் என இந்து மதத்தினரை இழிவாக பேசினார். இதற்கு தமிழகம் முழுவதும் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்து மத அமைப்புகள் திருமாவளவன் மீது வழக்கு தொடர வேண்டுமென தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர், தற்போது புதுச்சேரியிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், 9ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசி உள்ளார். இதுகுறித்து திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணியின் புதுச்சேரி மாநில செயலர் ரமேஷ் ஒதியன்சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்திலும், இந்து முன்னணி தென் சென்னை மாவட்ட செயலர் நித்தியானந்தன் கிண்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

Previous articleஇலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி
Next articleஎது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்