அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது!
அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து காஞ்சிபுரத்தில் கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர். பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நாகலுத்து தெரு சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கட்டிடம் கட்டும் பணிக்கு வேலை செய்ய வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே கட்டுமான பணிக்கு வருவது போல் வந்து கட்டிடத்தில் இருந்த புதிய இரும்பு கம்பிகளை சேகரிப்பு திருடி செல்ல முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் உரிமையாளர் ராஜா அவ்வழியே சென்ற போது மூர்த்தி நிற்பதை பார்த்து சந்தேகம் அடைந்து விசாரித்துள்ளார்.
சந்தேகமடைந்த ராஜா கட்டடத்தில் உள்ளே சென்று பார்த்த போது கம்பிகள் திருடி எடுத்துச் சொல்ல தயார் நிலையில் வைத்திருந்ததை பார்த்து திடுக்கிட்டார். இதனைக் பார்த்த மூர்த்தி தப்பி ஓட முயன்ற போது அப்பகுதி மக்கள் அவரை விரட்டி பிடித்து கை கால்களை கட்டி தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் இது குறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரை வரவழைத்து கம்பிகளை திருடி செல்ல முயன்ற மூர்த்தியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கட்டிட வேலைக்கு வந்தவர் கட்டுமான கம்பிகளை தைரியமாக திருடி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.