1960 காலகட்டங்களில் தொடங்கிய ஆளுமையை 50 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கலை ஞானம் அவர்கள் ஏவிஎம் ஸ்டுடியோவால் விரட்டி அடிக்கப்பட்டவர் என்று செய்தி எத்தனை பேருக்கு தெரியும். இவரை ஏன் ஏவிஎம் ஸ்டூடியோ காவலாளி விரட்டியடித்தார் ? கல்யாணம் எதற்காக ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு சென்றார் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
1953 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் தன்னுடைய நண்பரை காண்பதற்காக சென்று இருக்கிறார் கலைஞானம் அவர்கள். அப்பொழுது ஏவிஎம் ஸ்டுடியோவின் காவலாளி இவரை உள்ளே விட மறுத்து விரட்டியடித்த செயலானது நிகழ்ந்திருக்கிறது. அதன் பின், தன்னுடைய வாழ்நாளில் ஏவிஎம் ஸ்டுடியோ பக்கமே திரும்பி பார்க்காத கலைஞர் அவர்களுக்கு சரியாக 40 வருடங்கள் கழித்து அழைப்பு வந்திருக்கிறது.
அதாவது, 1993 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோ சரவணன் அவர்கள் கலைஞானம் அவர்களுக்கு போன் செய்து சந்திக்க வருமாறு அழைத்திருக்கிறார். தன்னை விரட்டியடித்த அலுவலகத்திலிருந்து தனக்கு போன் வந்தது குறித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த கலைஞானம் அவர்கள் உடனடியாக சரவணன் அவர்களை சந்தித்து இருக்கிறார்.
அப்பொழுது ஏவிஎம் ஸ்டுடியோ சரவணன் அவர்கள் தங்களிடம் ஏதேனும் கதை இருக்கிறதா நாம் இணைந்து செய்வோம் என கூறியுள்ளார். மேலும் உங்களுடைய கதைகள் அனைத்தையும் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்களுடன் இணைந்து பணிபுரிய நினைக்கிறேன் என கூறியவுடன், கலைஞானம் அவர்கள் கதை ஒன்றைக் கூறி இதனை ரவிக்குமார் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் அவர்களும் அந்த இடத்திற்கு வர மூவரும் இணைந்து கதை குறித்து ஆலோசனை செய்திருக்கின்றனர்.
அதன் பின்னர், கே எஸ் ரவிக்குமார் அவர்கள் கலைஞானத்திடம் நீங்கள் ஒரு கதை இருக்கிறது என்று கூறினீர்களே ” பூஞ்சோலை ” என்ற கதை அது என்னவாயிற்று என்று கேட்டிருக்கிறார்.
உடனே, கல்யாணம் அவர்கள் ஏவிஎம் ஸ்டூடியோ என்கின்ற மிகப்பெரிய நிறுவனத்தில் நீ பணிபுரிந்தால் உனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், மேலும் இது உனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் தெரிவித்துவிட்டு என்னுடைய கதையை மற்றொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார் கலைஞர் அவர்கள்.
கே ரவிக்குமார் அவர்கள் ஏவிஎம் ஸ்டுடியோ பேனருடன் இணைந்து இயக்கிய திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஏவிஎம் ஸ்டுடியோவின் பெயருக்காக திரையரங்குகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.