அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி!! தமிழ் தெரிந்தால் மாதம் ரூ.48,000 ஊதியம் கிடைக்கும்!!

Photo of author

By Gayathri

தலைநகர் சென்னையில் உள்ள மதுரவாயிலில் அமைந்துள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில்

பணி:

*மேலக்குழு – 01
*பகல் காவலர் – 01
*இரவு காவலர் – 01

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி:

மேலக்குழு,பகல் காவலர்,இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 45 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதிய விவரம்:

மேலக்குழு பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.15,000/- முதல் ரூ.48,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

பகல் காவலர் மற்றும் இரவு காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,000/- முதல் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் மதுரவாயிலில் அமைந்துள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 27 கடைசி தேதியாகும்.