நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட விபரீதம்! படப்பிடிப்பில் சோகம்.!

Photo of author

By Parthipan K

நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட விபரீதம்! படப்பிடிப்பில் சோகம்.!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அருண் விஜய்.இவர் பல வருடங்களாக நடிகராக இருந்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்பங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன.கதையை தேர்வு செய்வதில் சிறப்பான முறையில் இவரது தேர்வு இருக்கிறது.இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் திரைப்படம் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார்.ஆக்சன் திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குனர் ஹரி வல்லவர்.இவர் இதற்கு முன்பு இயக்கியத் திரைப்படங்களான சாமி,அருள்,தாமிரபரணி,சிங்கம்,பூஜை,சிங்கம்2,வேல் போன்றவை முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படங்கள்.இவரின் படங்களில் திரைக்கதை மிகவும் வேகமாக இருக்கும்.

மேலும் சண்டைக்காட்சிகள் மிகவும் அதிரடியாக இருக்கும்.தற்போது அருண் விஜயை வைத்து இவர் இயக்கும் படத்திலும் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமில்லை.தற்போது ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.சண்டைக்காட்சியில் அருண் விஜய் நடிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர் தற்போது ஓய்வில் உள்ளார்.கனமான பொருட்கள் எதையும் சில நாட்களுக்கு அருண் விஜய் தூக்கக்கூடாது என மருத்துவர் கூறியுள்ளார்.

இருப்பினும் அருண் விஜய் தனது பணிகளை முடித்துக்கொடுத்து விட்டே சென்றுள்ளார்.இவர் சண்டைக்காட்சிகளில் சிரத்தை எடுத்து நடித்துள்ளது படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மேலும் இந்த திரைப்படத்தில் இவருடன் பிரகாஷ்ராஜ்,யோகிபாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அருண் விஜய் பல வெற்றிப்படங்கள் கொடுத்திருந்தாலும் இயக்குனர் ஹரியுடன் தற்போதுதான் முதல் முறையாக இணைந்து பணியாற்றுகிறார்.இவர்களின் கூட்டணி வெற்றியாகவே அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.