அருண் விஜயின் அடுத்த பட சீக்ரெட் ரிலீஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய் தனது 33 வது படமாக ‘சீனம்’ என்ற படத்தை தேர்வு செய்துள்ளார். இந்தப்படத்தை அவருடைய தந்தை  ஆர்.விஜயகுமார் தயாரிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் அருண் விஜய் எமோஷனல் நிறைந்த கோபம் உடைய போலீஸ் கெட்டப்பில் நடிக்கவிருப்பதாக இந்தப் படத்தின் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன்தெரிவித்துள்ளார். 

இந்தப்படத்தின் டப்பிங் நிறைவு செய்த நிலையில் மீதமுள்ள படத்தின் படப்பிடிப்பு ஆனது அரசின் அறிவுரைக்கு பிறகு எடுக்கப்படும் என்றும் இந்த படமானது 2022 ஜூன் மாதம் திரையிட போவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் முரட்டு மீசையுடன் கூடிய தாடியை வைத்திருப்பதால், அவர் போலீஸ் கெட்டப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் இரண்டு கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.அருண் விஜயின் அடுத்த பட சீக்ரெட் ரிலீஸ்!!இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்கவுள்ளார். அருண் விஜய்யுடன் கதாநாயகியாக பாலக் லால்வானி ஜோடி சேர்ந்துள்ளார். பாலக் லால்வானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சகா, குப்பத்து ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இத்தனை சுவாரசியங்கள் நிறைந்த சினம் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

 

 

 

 

 

Leave a Comment