ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!

Photo of author

By Hasini

ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!

நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த ஜெர்மனிய பெண் தன்னை திருமணம் செய்வதாக தன்னிடம் ஏமாற்றி 70 லட்ச ரூபாய் வரை ஆர்யா வாங்கி படத்தில் முதலீடு செய்துள்ளதாக  பிரதமரிடமும், குடியரசுத் தலைவர் இடமும் புகார் மனு தந்திருந்தார். போலீசார் இடம் புகார் மனு கொடுத்து அதற்காக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதை அப்படியே கிடப்பில் போட்ட நிலையில்,  இது பற்றி புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, அதாவது பிப்ரவரி மாதம் புகார் அளித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தான் விசாரணையை ஆரம்பித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டபோது ஆர்யா குற்றமற்றவர் என்றும், ஆர்யா போல் பேசி, மிமிக்ரி செய்து அந்தப் பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை கைது செய்ததாகவும், கூறி போலீசார் அந்த கேஸை உடனடியாக மூடி மறைத்து விட்டனர்.

அதனை தொடர்ந்து ஜெர்மனி பெண் மீண்டும் அவரது வழக்கறிஞர் மூலம் என்னிடம் பேசியது இவர்கள் இல்லை. ஆர்யாதான் என்றும், எங்களிடம் அதற்கான அனைத்து சாட்சிகளும் உள்ளது என்றும், தெரிவித்திருந்தார். தற்போது ஆர்யா மீது மீண்டும் அந்த வழக்கு குறித்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் இது பற்றி செய்தியாளர்களிடம் கூறும் போது நடிகர் ஆர்யாவுக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை என பகீரென்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

இந்த மாதம் 2ஆம் தேதி ஆர்யா காவல் ஆய்வாளரை தனிமையில் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த ஜெர்மன் பெண்ணின் வழக்கறிஞர் செய்திகளில் கூறும் போது முதலாவது குற்றவாளியான ஆர்யாவையும், இரண்டாவது குற்றவாளியான ஆர்யாவின் தாயாரையும் இதில் அழைக்கவே இல்லை. மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும், ஆர்யா நடிகர் என்பதால் தான் நேரடியாக சென்று பணம் எடுக்க முடியாத சூழல் நிலவு வருவதால், அவரின் மேனேஜர்கள் பணம் எடுக்கும் வகையில் பணம் அனுப்பும் படி கூறி இருந்தனர்.

ஆள்மாறாட்டம் செய்த ஆர்யாவின் மேனேஜர்கள் முகமுது அர்மான், முகமது ஹுசைனி இருவரும் 3-வது 4-வது குற்றவாளிகள் மட்டுமே. அவர்களை மட்டுமே விசாரணைக்கு அழைத்து வந்தார்கள் என்றும், தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் சென்னை காவல் ஆணையர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பணம் இருந்தால் யாரும், யாரையும் எது வேணாலும் செய்யலாம் என்பது போல் சொல்கிறார்கள் போல. இவ்வளவு நாகரீக உலகில் ஆர்யா போல் பேசுபவர்களையும் ஆர்யாவையும் தெரியாமலேயேவா அந்த பெண் 70 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பார். அதுவும் ஜெர்மன் பெண் வேறு. வளர்ந்த நாட்டில் உள்ள தற்போதைய சூழலில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு மினிமம் படித்த பெண் கூட மிகவும் உஷாராக இருக்கும்போது, இலங்கையை சேர்ந்த பெண் என்றாலும், ஜெர்மன் பெண் எவ்வாறு அப்படி ஏமாறி இருப்பார். இதை யாராவது நம்பமுடிகிறதா? எப்படி மூடி மறைக்கிறார்கள் பாருங்கள் உண்மையை.