நீரில் மிதக்க விருக்கும் மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
217

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கோவை, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு,திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

Previous articleஅரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!
Next articleஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here