உயிரை பணையம் வைத்து சீரியல் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டும் ஆசாமி!! வைரலாகும் வீடியோ காட்சி!!
முன்பெல்லாம் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் தங்களுக்கு பொழுதுபோக்காக இருக்க வேண்டுமென தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து வந்தனர். பின்பு அந்த தொலைக்காட்சி சீரியல் மூலம் பலன் தொலைக்காட்சிகளில் பிரபலம் அடைவதை கண்டு பல தனியார் தொலைக்காட்சிகள் உருவாக்கி அதில் பல வித்தியாசமான பல கதைகள் கூடிய சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் சீரியல் ஒளிபரப்பப்பட்டு இல்லத்தரசிகளை மகிழ்வித்து வருகிறது. மேலும் சீரியல் என்றாலே வீட்டிலுள்ள இல்லத்தரசிகளுக்கு மட்டுமே என்று இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த கொரோனா தொற்று காரணமாக அரசு மக்களை வீட்டில் தனிமை படுத்திக் கொண்டு இருக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த சமயத்தில் வீட்டை விட்டு எங்கேயும் செல்ல முடியாத வீட்டிலுள்ள நபர்களும் வேறு வழியில்லாமல் சீரியல் பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.
தற்பொழுது இல்லத்தரசிகளை விட வீட்டின் ஆண் மகன்கள் அதிகம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த வகையில் தற்பொழுது சில இடங்களில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளதால் வீட்டில் ஆண் மகன்கள் தங்களின் வேலையை பார்க்க கிளம்பி விடுகின்றனர். ஆனாலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பார்த்துக் கொண்டிருந்த செயலுக்கு அடிமையாகி சீரியல் பார்ப்பதை தவிர்க்க தெரியாமல் உள்ளனர். ஆனாலும் தற்பொழுது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் உதவியால் எங்கு இருந்து வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் கண்டு களிக்கின்றனர்.
இந்த வகையில் கோயம்புத்தூரில் காந்திபுரம் மேம்பாலத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் வண்டி ஓட்டிக்கொண்டே தன் தொலைபேசி வழியாக சீரியல் பார்த்துக் கொண்டேன் செல்லும் வீடியோ காட்சி ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி உயிரை பணையம் வைத்து வண்டி ஓட்டியபடி தொலைக்காட்சி வழியே சீரியல் பார்த்துக் கொண்டு செல்லும் நபரின் வீடியோவிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அந்த வீடியோ வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இப்படி ஒரு சிலர் செய்யும் அலட்சியத்தினால் தான் எதிரில் வருபவர்கள் அல்லது அவருடன் பயணம் செய்யும் அப்பாவிகளுக்கு ஆபத்தாக முடிகிறது. இப்படி அலட்சியம் இல்லாமல் பாதையில் கவனத்தைச் செலுத்தி வண்டியை ஓட்டினான் அதிக விபத்துகளை தவிர்க்கலாம் என்றும் பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.