முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகை!! இவங்களுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!!

0
64
Famous composer and famous actress joining for the first time !! This is the first time for them !!
Famous composer and famous actress joining for the first time !! This is the first time for them !!

முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகை!! இவங்களுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!!

பிரபல தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடைய அக்காவின் மகன் ஆவார். ஷங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவாது வெயில் திரைப்படம். இந்த படம் விமர்சனங்களால் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படத்தின் பாடலும் பலத்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. தமிழ் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.

ஏ.ஆர். ரகுமானின் இசையமைப்பில் உருவான ஜெண்டில்மேன் திரைப்படத்தின் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். பின்னர் ரகுமானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதில் நான் ராஜாவாகப் போகிறேன், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, தலைவா, டார்லிங், த்ரிஷா இல்லன நயன்தாரா, பென்சில், குப்பத்து ராஜா கடவுள், இருக்கான் குமாரு, செம்ம, ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த திரைப்படங்களில் சில வெற்றி படங்களாகவும் மாறியுள்ளது.

 

இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் தற்போது ஜி.வி. பிரகாஷ் படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளார்கள் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தைப் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஜி.வி. பிரகாசுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை காயத்ரி சங்கர் நடிக்க உள்ளார் என தகவல் வந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து முதல் முறையாக இப்படத்தில் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

author avatar
CineDesk