இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்று வந்த மூன்றாவது போட்டி 5 வது நாளாக மழை காரணமாக சமனில் முடிந்துள்ளது.
இந்த போட்டியின் நடுவே விராட் மற்றும் அஸ்வின் இருவரும் உருக்கமாக பேசிய புகைப்படம் வைரலானது. அதில் அவர் உருக்கமாக பேசுவது போலவும் அவர் கண்ணீர் விட்டு கலங்கியது போலவும் ரசிகர்கள் மத்தியில் தீ போல பரவியது. இதனை தொடர்ந்து அஸ்வின் ஓய்வை அறிவிக்க போகிறார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தேறியது.
போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது நடந்த இந்த நிகழ்வு போட்டி நடந்த உடன் உண்மையானது. போட்டி சமன் என கூறி முடிவடைந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் தான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பரப்பிய தகவல் உடனே உண்மையானது ரசிகர்களின் மனதை உருக்கி உள்ளது கிரிக்கெட் வல்லுனர்களும் அவருக்கு வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.