CRICKET: இதுவரை எட்டாவது வரிசை மற்றும் 6 வது வரிசையில் களமிறங்கிய அஸ்வின் 10 வதாக களமிரக்கப்பட்டுளார்.
இந்திய அணி ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தனை போட்டிகளில் விளையாடியும் இதுவரை எந்த போட்டியிலும் பத்தாவதாக களமிறங்கியது இல்லை. ஆனால் நியூசிலாந்து உடன் விளையாடும் மூன்றாவது போட்டியில் அஸ்வின் பத்தாவதாக களமிறங்கியுள்ளார்.
இந்த குளறுபடிக்கு காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அஸ்வின் இதுவரை விளையாடிய போட்டியகளில் அதிகபட்சமாக 8 வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார்.இதுவரை அவர் 83 போட்டிகளில் 8 வரிசையில் களமிறங்கி 1977 ரன்கள் எடுத்துள்ளார். எட்டாவது வரிசையில் இவரின் சராசரி 26.01 ஆகும் இவர் 8 வரிசையில் தான் 4 சதம் மற்றும் 7 அரை சதம் அடித்துள்ளார்.
6 வது வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார் அந்த வரிசையில் அவர் 531 ரன்கள் எடுத்துள்ளார். அந்த வரிசையில் அவரின் சராசரி 35.40 ஆகும் இந்த வரிசையில் இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். இதுவரை இதற்கும் குறைவான வரிசை களமிறங்கியது என்றால் அது 9வது தான்.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3 வது போட்டியில் பலரும் தங்கள் வரிசையை மாற்றி களமிறங்கினர் அதற்கு காரணம் கம்பீர் தான். முகமது சிராஜ் களமிறக்கினார் கம்பீர் அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்து 28 ரன்கள் முன்னிலையில் உள்ளது.