cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். இந்த மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேலும் அஸ்வின் என் சொந்த மண்ணில் விளையாடும் போது ஓய்வை அறிவிக்கவில்லை? மேலும் இதனை எப்படி பிசிசிஐ ஒப்புக்கொண்டது? எனவும் பல கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் அஸ்வின் கூறுகையில் ஒரு நாள் என் மனைவியுடன் நான் பேசிகொண்டிருந்த போது வாஷிங்டன் சுந்தர்,ஹிருத்திக் ஷோக்கீன் என சில வீரர்கள் இந்திய அணியில் விளையாட தயாராகி வருகின்றனர்.
என கூறிய போது என் மனைவி என்னிடம் அவர்கள் அனைவரும் நீ எப்போது ஓய்வு பெறுவாய் என காத்திருப்பார்கள் என கூறினார். ஒரு நிமிடம் நான் திகைத்து போனேன் ஆனால் அது உண்மைதான் ஏனெனில் நானும் அப்படி யோசித்துள்ளேன் என்று கூறினார்.
மேலும் அவர் இந்திய மண்ணில் ஓய்வு பெறாதற்கு காரணம் வாசிங்க்டன் தற்போது பவுலிங் மற்றும் பேட்டிங் சிறப்பாக செய்து வருகிறார். இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இருந்து அவரால் எந்த தாகமும் ஏற்படுத்த முடியவில்லை என்றும் ஒப்புக்கொண்டார். மேலும் இன்னும் 6 மாதங்கள் உள்ளது இந்தியாவில் விளையாட எனவே இப்போது ஓய்வு பெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது.