ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023… மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!!

0
139

 

ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023… மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா…

 

நடப்பாண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி மலேசியா ஹாக்கி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

நடப்பாண்டுக்கான 7வது ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணியும் மலேசிய ஹாக்கி அணியும் மோதியது.

 

நேற்று(ஆகஸ்ட்6) இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முதல் பாதியின் 15வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி அணியின் கார்த்தி செல்வம் அவர்கள் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய ஹாக்கி அணி முன்னிலை பெற்றது.

 

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஹர்திக் சிங் ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு இரண்டாவது கோலை பெற்று தந்தார். பின்னர் அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலும், ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங் ஒரு கோலும், 54வது நிமடத்தில் ஜுக்ராஜ் சிங் ஒரு கோலும் அடித்தனர்.

 

இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 கோல் அடித்தது. இதையடுத்து அந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி அணியை தோற்கடித்தது.

 

முன்னதாக சீனா ஹாக்கி அணிக்கும் தென் கொரியா ஹாக்கி அணிக்கும் நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் சமனில் முடிந்தது. அதே போல மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் ஹாக்கி அணியும் ஜப்பான் ஹாக்கி அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆட்டத்தின் முடிவிலும் இரண்டு அணிகளும் 3 கோல்கள் அடித்திருந்ததால் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது.

 

Previous articleஉலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!
Next articleமுகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்!!