ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!!

0
163
Asia Cup Cricket Match!! Rohit Sharma equals Pakistan player and creates a new record!!
Asia Cup Cricket Match!! Rohit Sharma equals Pakistan player and creates a new record!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறையாவது மோத வேண்டும். இதன் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த சூழ்நிலையில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுக்கான 3-வது ஆட்டத்தில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி 121 ரன்கள் எடுத்து ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்லதொரு துவக்கத்தை தொடங்கி வைத்தனர். இதனால் ஓப்பனிங் பார்டனர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை கடந்தது.

இதில்   ரோகித் சர்மா 56 ரன்களும், கில் 58 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கள நடுவர்கள் ஆய்வு செய்த போது மைதானம் மிகவும் ஈரப்பதமாக இருந்ததால் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4  சுற்று இன்று நடைபெற உள்ளது. தற்போது விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ள நிலையில் இன்று 3 மணி அளவில் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா, பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சாஹித் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் சாதனை படைத்தார்.

இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா  இதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாகித்  அப்ரிடி சாதனையை சமன் செய்துள்ளார்.

1.சாகித் அப்ரிடி 26 (21  இன்னிங்ஸ்) , ரோகித் சர்மா 26* (24 இன்னிங்ஸ்),

2.சனாத் ஜெயசூர்யா  23 ( 24 இன்னிங்ஸ்),

3.சுரேஷ் ரெய்னா 18 (13 இன்னிங்ஸ்).

இந்த சாதனையை மட்டுமில்லாமல் டெஸ்ட், ஒரு நாள், டி20, என அனைத்து வகை போட்டிகளையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர்கள் என்ற கிறிஸ் கெயில் படைத்த சாதனையையும் உடைத்து ரோகித் சர்மா வரலாறு படைத்தார்.

1.ரோகித் சர்மா – 33

2. கிறிஸ் கெயில் – 30

3.ஷாகித் அப்ரிடி- 29

4.சுரேஷ் ரெய்னா- 25.

 

Previous articleஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?..
Next articleஇந்த தமிழ் படங்களின் காப்பி தான் ‘ஜவான்’!! நெட்டிசன்கள் கலாய்.. என்ன அட்லீ இதெல்லாம்?